Sunday, May 25, 2014

Wisdom Institute
மனித வாழ்க்கையை செதுக்கும் காரணி, கல்வி. தனி மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கும், மனிதவள மேம்பாட்டிற்க்கும் அடித்தளம் அமைப்பது கல்வியாகும். அதனால் தான் அழியாத செல்வம் கல்வி என்று வள்ளுவரே கூறியிருக்கின்றார். இத்தகைய கல்வியில் ஏற்ற தாழ்வு எங்கு இருந்து வருகின்றது, குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு commerce துறை என்ற எண்ணமும் மனத்தில் தவறாக விதைத்து உள்ளனர்.
மருத்துவம் மற்றும் பொறியியல்தான் சிறந்த படிப்புகள், வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் அதிகம் என்ற மாயை மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கின்றதுஉண்மையில் இன்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதற்க்கு செலவிடும் பணம் அதிகம், ஆனால் இக்கல்விக்கான  வேலைவாய்ப்பு இன்றையக்காலகட்டத்தில் குறைந்து கொண்டே வருகின்றது காரணம் நடைமுறை மற்றும் செயல்முறை கல்வி அறிவு  மாணவர்களுக்கு இல்லை. அதனால் நல்ல சம்பளத்தில் பணியாமற முடியாமல் குறைந்த சம்பளத்திற்க்கும் படித்த கல்விக்கும் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாத வேலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இன்று நகரத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைவாய்ப்பு மிகுந்த கல்விப்பயில வைக்கின்றனர். கிராமப்புறங்களில் இருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளை வழி நடத்துவதில் சற்று சிரமமாகவே இருகின்றது.. அவர்களுக்கு பொறியியல், மருத்துவம், சட்டம் இதை தவிர்த்து கல்லூரியில் வழங்கும் இளங்களை,முதுகலை படிப்புகள் மட்டுமே தெரிகின்றது, ஆகையால் முதல் தலைமுறையில்  கல்விகற்க்கும் மாணவர்களுக்கு commerce படித்தால் தொழில் சார்ந்த படிப்புகள் இருப்பது தெரிவது இல்லை, தெரிந்தாலும் அதன் வழிமுறைகள் தெரிவதில்லை.
பிளஸ் 2க்கு பின் தேர்வு செய்யும் கல்விதான், வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும். மருத்துவம், பொறியியலுக்கு இடாக  இன்று commerce பயின்ற மாணவர்களுக்கு தொழில்சார்ந்த மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் உள்ளன. அவை CA - Chartered Accountant (பட்டய கணக்காளர்), CMA/CWA - Cost & Management Accountant (செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்), ACS (நிறுவனச் செயலாளர்) சம்பந்தமான படிப்புகள் இருக்கின்றது. இந்த மூன்று படிப்பில் எதை தேர்வு செய்வது
       நீங்கள் ஆடிட், வரி மற்றும் நிதி கணக்கியல் போன்ற துறையில் சாதிக்க CA படிப்பை தேர்வு செய்யுங்கள்.
       நிர்வாகத்தின் நிதியியல் மேலாண்மை, மறைமுக வரி, நிர்வாக உற்பத்தி செலவு, பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் தொழிலாளர் உரிமை பாதுகாக்க ICWA/CMA  படிப்பை தேர்வு செய்யுங்கள்.
       ஒரு நிறுவனத்தின் சட்டம், செயலாக்கம், ஒப்பந்தம், நிர்வாகம் மற்றும் வரி சம்பந்தமான ஆலோசகராக செயல்பட ACS படிப்பை தேர்வு செய்யுங்கள்.
மற்ற படிப்புகளைப் போன்று அதிகம் செலவு பிடிக்கக் கூடியதல்ல இந்த CA/CS/CMA படிப்புகள். ப்ளஸ்-2 முடித்து மிகக் குறைந்த செலவுகளோடு நான்கு வருடம் படித்து  தேர்வானால், ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயரைவிட அதிகமாக அதாவது மாதம் 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் என சம்பாதிக்கலாம்!
அதிக வருவாய் இட்டும் வேலையாக  CA/CMA/CS உலகளவில் இரண்டாவது இடத்திலும், இந்தியா அளவில்  நான்காவது இடத்திலும் உள்ளது
CA/CMA/CS படித்தவர்களின் தேவை இந்திய நிறுவங்களுக்கும் மட்டுமல்லாமல் பன்னாட்டு வர்த்தகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இவர்களின் பங்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அனைத்து தொழில்துறை வார்த்தக வளர்ச்சிக்கு  இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்க மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஊக்குவிக்க தேவைப்படும் திறன் மற்றும் உடனடியாக  முடிவெடுக்கும் திறமை CA/CS/CMA படித்தவர்களால் மட்டுமே முடியும் .
சர்வதேச அளவில் கணக்கியல் வல்லுநர்களுக்கு பெரிய தேவை இருக்கிறது. சி.. படித்தவர்களுக்கு வங்கி, தொலைத் தொடர்பு, நிதி, பங்குத் தரகு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைகள் காத்திருக்கின்றன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு கம்பெனியிலும் சி.. படித்த ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது விதி. அக்கவுன்ட்ஸ், ஆடிட், கார்ப்பரேட் நிதி, திட்ட அறிக்கை தயாரிப்பது, வர்த்தக சட்டங்கள், வரி விதிப்புகள், நிர்வாகம் ஆகிய துறைகளில் சவால் மிக்க வேலை வாய்ப்புகளை இந்தப் படிப்பு அள்ளித் தருகிறது.
Job Opportunity For Chartered Accountant – Auditing, Internal Auditing, Finance Manager, Assistant Finance Manager, Senior Finance Manager, Chief Finance Office, Salary Ranges Between 4.77 Lakh To 65 Lakhs.
CA படிப்புக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது Cost And Management Accountant படிப்பு . Cost And Management Accounts என்பது ஒரு பொருளைத் தயாரிக்கும்போது மின்சாரம், தண்ணீர் போன்ற பல பொருட்கள் எவ்வளவு செலவாகிறது என்பதைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அந்தப் பொருளின் விலையை நிர்ணயிப்பது. தற்போது பொருள் தயாரிப்பு சார்ந்த துறைகள் அதிகரித்து வருவதால், Cost And Management Accounts  படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
Job Profile For Certified Management Accountant – Accounting, Fiannceial Reporting, Budgeting, Financial Modeling Finance Manager, Financial Analyst, Finance Controller, Cost Accountant, Chief Financial Officer. Salary Ranges between 4.77 Lakh to 54 Lakh.
அடுத்த நிலையில் Corporate secretaryship course, இரண்டு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் பங்கு முதலீட்டைக் கொண்டிருக்கும் கம்பெனிகள் மற்றும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் கம்பெனி செக்ரெட்டரிஷிப் பணிக்குப் பதிவு பெற்றவர்களை நியமனம் செய்திருக்க வேண்டும் என்பது விதிஇவர்கள் ஒரு நிறுவனத்தின் சட்டம், செயலாக்கம், ஒப்பந்தம், நிர்வாகம் மற்றும் வரி சம்பந்தமான ஆலோசகராக நியமிக்க படுகின்றனர் 
Job Profile Of Company Secretaries - Legal Compliance, Accounting, Financial Analysis, Financial Reporting, Tax Compliance, Corporate, Regulatory Compliance, Accounts Management, Risk Management And Risk Control, Contract Managemnt. Salary Ranges Between Rs.4 Lakhs To Rs.48 Lakhs.
இன்று CA/CS/CMA  படித்தவர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது, அதாவது 100 பேர் தேவைப்படும் இடத்தில் 10 பேர்தான் இருக்கின்றார்கள்.. இதனால் இந்த படிப்புகள் படித்தால் வேலை வாய்ப்புக்கு குறைவில்லை.
முன்பெல்லாம், கல்லூரி முடித்தவர்களே இந்த படிப்பை தேர்ந்தெடுக்க முடிந்தது. ஆனால் இன்று 10த் ,12த் படித்த மாணவர்கள் கூட இந்த  படிப்பை மேற்கொள்ளமுடியும். முன்பு ஐந்தரை ஆண்டுகள் இருந்த படிப்பு இன்று நான்கு வருடமாக மாறியுள்ளது. இந்த படிப்பு முழுநேர படிப்பு கிடையாது   வீட்டிலிரிந்தோ அல்லது தனியார் நிறுவனகள் நடத்தும் சிறப்பு வகுப்புகளில் சேர்ந்தோ படிக்கலாம். இளங்களை பட்டத்துடன் சேர்த்து பகுதி நேரத்தில் இந்த படிப்புகளை படிக்கலாம். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற படித்த மாதிரியே இதற்க்கும் படித்தால் சுலபமாக தேர்ச்சி பெற்றுவிடலாம்.
இந்த படிப்புகள் மூன்று நிலை கொண்டது. foundation, intermediate, professional level, அத்துடன் 100 மணிநேர கணினி பயிற்சி, மேலாண்மை பயிற்சி, தொழில் மற்றும் நடைமுறை பயிற்சி அடங்கும்.
படிக்கும்போதே ஆடிட்டரிடம் அல்லது இத்துறை சார்ந்த நபர்களுடன்  அல்லது வல்லுநர்களுடன் உதவியாளராக சேர்ந்து மாதம் 5000 ரூபாலிருந்து உதவித்தொகை பெறலாம். அதனால் அடிப்படை கல்வியுடன், நடைமுறை அறிவும் பெற இப்படிப்பு வித்திடும்.
தேர்ச்சி பெற்றபின் நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்புத்தரும்வேலை செய்ய விருப்பம் இல்லாதவர் தனியாக பயிற்சி செய்தும் சம்பாதிக்கலாம்.
நான்கு ஆண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியாக மாற்றிவிடும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் லட்சங்கள் வரை சம்பளம் கிடைக்க செய்யும் படிப்புகளில் CA/CS/CMA 'வும் ஒன்று.
இன்ஷ¨ரன்ஸ், வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனங்கள் இந்தியாவில் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றுக்கு CA/CS/CMA படித்தவர்களின் தேவையும் இப்போது உள்ளதைவிட எதிர்காலத்தில் நிச்சயம் அதிகரிக்கும். எந்தத்துறை நிறுவனமாக இருந்தாலும் அங்கு இவர்களுக்கு  வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. நன்றாகச் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சேணம் மாட்டிய குதிரை போல வெறுமனே .டி. துறையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்காமல்,  இந்த படிப்புகளை பயின்று வெற்றி அடையலாம்.
ஆம் நமது ஊரில் இக்கல்விக்கான அனைத்து வசதிகளும் கொண்ட நிறுவனம் வந்துவிட்டது, இனி நாம் பிள்ளைகளும் நகரத்தில் இருக்கும் மாணவரகள் போல இந்த படிப்புகளில் சேரலாம்இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நமது சாமர்த்தியம்!
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள: Wisdom Institute of Finance and Accounts: 04341-223522, 9791432234. ஜூலை முதல் வாரத்தில் இருந்து சிறப்பு வகுப்புகள் தொடங்காவிருக்கின்றது

*********